புதன், 20 ஜனவரி, 2010

அம்மாவின் கரண்டி

வடநாட்டு உணவு வகைகளை
 விழுங்கி தொலைக்க வேண்டிய
அயல்நாட்டு வாழ்க்கை வாய்த்துவிட்ட பிறகு
ஒவ்வொரு உணவு வேளையின் போதும்
நினைவுக்கு வருகிறது
கரண்டி பிடித்த அம்மாவின் கை .

punnagai

காய்ச்சல் தலைவலியுடன் 
மருத்துவமனையின் நீண்ட வரிசையில் 
காத்திருக்க நேர்கையில் 
சலிப்பில் சொன்னது மனது 
'ச்சே  என்ன மோசமான நாளிது".

"தயவுசெய்து நாட்களை பழிக்காதே நண்பா 
ஒவ்வொரு  மணித்துளியும் வரம் என்று
எனக்குதான் நன்றாகத் தெரியும் "
என்று தன் சிறு புன்னகையால் 
சொல்லாமல் சொன்னாள்
புற்றுநோய்ச் சிறுமி. 

pakkyasaaligal

வேண்டியபடி  பால்யம்
விரும்பிய படிப்பு
நினைத்த வேலை
கனவு கண்ட வாழ்க்கை என்று
அமையப் பெற்றவர்கள்
 பாக்யசாலிகள் .
தங்கள் பாக்யத்தை உணராதவர்கள் .

செவ்வாய், 19 ஜனவரி, 2010

mana nadukkam

சூறாவளி, பூகம்பம்
புயல்காற்றை ஒருசேர
உணர்கிறது மனது .
தற்செயலாய் தொலைபேசியில்
பிரிந்த காதலியின் குரல்.