வடநாட்டு உணவு வகைகளை
விழுங்கி தொலைக்க வேண்டிய
அயல்நாட்டு வாழ்க்கை வாய்த்துவிட்ட பிறகு
ஒவ்வொரு உணவு வேளையின் போதும்
நினைவுக்கு வருகிறது
கரண்டி பிடித்த அம்மாவின் கை .
அன்றாடம் நான் கடந்து வரும் நிகழ்வுகளில் என்னுடைய பார்வையை பதிப்பதே, என் ஜன்னலின் நோக்கம். தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

புதன், 20 ஜனவரி, 2010
punnagai
காய்ச்சல் தலைவலியுடன்
மருத்துவமனையின் நீண்ட வரிசையில்
காத்திருக்க நேர்கையில்
சலிப்பில் சொன்னது மனது
'ச்சே என்ன மோசமான நாளிது".
"தயவுசெய்து நாட்களை பழிக்காதே நண்பா
ஒவ்வொரு மணித்துளியும் வரம் என்று
எனக்குதான் நன்றாகத் தெரியும் "
என்று தன் சிறு புன்னகையால்
சொல்லாமல் சொன்னாள்
புற்றுநோய்ச் சிறுமி.
pakkyasaaligal
வேண்டியபடி பால்யம்
விரும்பிய படிப்பு
நினைத்த வேலை
கனவு கண்ட வாழ்க்கை என்று
அமையப் பெற்றவர்கள்
பாக்யசாலிகள் .
தங்கள் பாக்யத்தை உணராதவர்கள் .
விரும்பிய படிப்பு
நினைத்த வேலை
கனவு கண்ட வாழ்க்கை என்று
அமையப் பெற்றவர்கள்
பாக்யசாலிகள் .
தங்கள் பாக்யத்தை உணராதவர்கள் .
செவ்வாய், 19 ஜனவரி, 2010
mana nadukkam
சூறாவளி, பூகம்பம்
புயல்காற்றை ஒருசேர
உணர்கிறது மனது .
தற்செயலாய் தொலைபேசியில்
பிரிந்த காதலியின் குரல்.
புயல்காற்றை ஒருசேர
உணர்கிறது மனது .
தற்செயலாய் தொலைபேசியில்
பிரிந்த காதலியின் குரல்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)