kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜனவரி, 2010

punnagai

காய்ச்சல் தலைவலியுடன் 
மருத்துவமனையின் நீண்ட வரிசையில் 
காத்திருக்க நேர்கையில் 
சலிப்பில் சொன்னது மனது 
'ச்சே  என்ன மோசமான நாளிது".

"தயவுசெய்து நாட்களை பழிக்காதே நண்பா 
ஒவ்வொரு  மணித்துளியும் வரம் என்று
எனக்குதான் நன்றாகத் தெரியும் "
என்று தன் சிறு புன்னகையால் 
சொல்லாமல் சொன்னாள்
புற்றுநோய்ச் சிறுமி. 

செவ்வாய், 19 ஜனவரி, 2010

mana nadukkam

சூறாவளி, பூகம்பம்
புயல்காற்றை ஒருசேர
உணர்கிறது மனது .
தற்செயலாய் தொலைபேசியில்
பிரிந்த காதலியின் குரல்.